
கடந்த மே 28ஆம் தேதி டெல்லியில் திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இடம் பெற்றுள்ள இந்திய வரைபடத்திற்கு நேபாளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அகண்ட பாரதம் என்ற தலைப்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்திய வரைபடம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் நேபாளமும் இடம்பெற்றுள்ளது. இது நேபாளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரம் குறித்து இந்திய அரசிடம் எடுத்துச் செல்ல இருப்பதாக நேபாள பிரதமர் புஷ்ப கமல் உறுதி அளித்துள்ளார். 4 நாள் பயணமாக நேபாள பிரதமர் இந்தியா வந்திருக்கும் நிலையில் இந்த சர்ச்சை வெளிப்பட்டிருப்பதால் இந்த சந்திப்பில் இதுகுறித்து அவர் எடுத்துரைப்பார் எனக் கூறப்படுகிறது.