modi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

கடந்த எட்டாம் தேதி தேசிய பாதுகாப்பு அமைப்பகம் மாவோயிஸ்ட் போன்ற அமைப்புகளால் பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் என தெரிவித்திருந்தது. பிரதமர் மோடியின் சாலை வழி பிரச்சாரங்களை பயன்படுத்தி ராஜீவ் காந்தி கொலை போன்ற திட்டத்தை மாவோயிஸ்ட் அமைப்புகள் நடத்த திட்டமிட்டு வருகின்றன எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. தற்பொழுது மோடி மீதான அச்சுறுத்தல் இன்னும் அதிகரித்து வருகிறது எனவும் 2019 -ஆம் ஆண்டு பொதுதேர்தலுக்கு முன்னே குறிவைக்கப்படும் நபர்களில் பிரதமர் மோடி உள்ளார்என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே பிரதமர் மோடிக்கும் அவரது பாதுகாப்பு அமைப்பிற்கும் மத்திய உள்துறை அமைச்சகம் பல நிபந்தனைகளையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது. எஸ்பிஜி எனப்படும் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரும், சிபிஜி எனப்படும் பிரதமருக்கு நெருக்கமாக இருந்து பாதுகாப்பு வழங்கும் பாதுகாப்பு அணிகளும்உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

ரொட்ஷோ எனப்படும் சாலையோரம் கூடியுள்ள மக்களை எந்தவித திட்டமிடலும் இல்லாமல் திடீரெனெ சந்திப்பது போன்றவைகளை பிரதமர் தவிர்க்க வேண்டும் என அவரது சிறப்பு பதுகாப்பு பிரிவினரால் ஏற்கனவே மோடி அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பினால் இன்னும் பலத்த பாதுகாப்புகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

அதுபோல் அனைத்து மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் பிரதமருக்கு அச்சறுத்தல் தரக்கூடிய அடையாளம் தெரியாத அமைப்புகள் பற்றி குறிப்பிட்டுள்ளது. மேலும் மாவோயிஸ்டுகளின் பாதிப்புகள் அதிகமுள்ள மாநிலங்களான மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், ஒடிஷா, பஞ்சாப், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கு பிரதமர் பயணம் மேற்கொள்ளும்பொழுது மற்ற மாநிலங்களுக்கு பயணப்படும் பொழுது ஏற்படுத்தப்படும் பாதுகாப்புகளை விட அதிகப்படியான பாதுகாப்பு நவடடிக்கை இருக்க வேண்டும் எனவும்மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.