Advertisment

ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசுகிறார்... டெல்லி பாஜக தலைவர் பேச்சு...

காங்கிரஸ் கட்சி எம்.பி யான ராகுல் காந்தி மீண்டும் மீண்டும் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசி வருகிறார் என டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

Advertisment

manoj tiwari about rahul gandhi

தெலங்கானா பெண் மருத்துவர் கொலை வழக்கு, உன்னாவ் பெண் உயிருடன் எரிக்கப்பட்ட விவகாரம் ஆகியவை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ராகுல் காந்தி இதுகுறித்து வேதனை தெரிவித்திருந்தார். மேலும் வயநாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை நடப்பதில் உலகின் தலைநகராக இந்தியா உருவாகியுள்ளது" என கூறினார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, "ராகுல் காந்தி ஒருபோதும் இந்தியாவை ஒரு பெருமைமிக்க நாடாக பார்க்கவோ மாற்றவோ முடியாது. மீண்டும் மீண்டும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தோன்றும் வகையில் பேசுகிறார். அவர் பிரதமருக்கு எதிராக தவறான சொற்களைப் பயன்படுத்தினார். அவர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவித்தார்.

manoj tiwari priyanka reddy Rahul gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe