ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புதியதுணைநிலை ஆளுநராகபாஜகவைச் சேர்ந்த மனோஜ் சின்ஹாநியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஜம்மு-காஷ்மீர் மாநிலதுணைநிலை ஆளுநராக இருந்தஜி.சி.முர்முவின்ராஜினாமாவை ஏற்று கொண்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இந்நிலையில், ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் இணை அமைச்சராக பணியாற்றிய மனோஜ் சின்ஹா ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநராகநியமனம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தைசேர்ந்த 60 வயதான மனோஜ் சின்ஹாகாசியாப்பூர் மக்களவை எம்.பி.யாக மூன்று முறை தேர்வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.