/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/maxresdefault-(6)-std.jpg)
கோவா முதல்வரான மனோகர் பாரிக்கர் உடல் நல பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவருக்கு இருந்த கணைய அழற்சி பாதிப்பு காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். அதனை தொடர்ந்தும் உடல் நலம் அவ்வப்போது பாதிப்படைய, பனாஜி அல்லது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் அவரது உடல் நலம் மேலும் பாதிப்படைய, மூக்கில் ‘டியூப்’ சொருகியபடி கோவா சட்டசபைக்கு வந்து பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் கடந்த 31-ந்தேதி மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மனோகர் பாரிக்கரின் உடல்நிலை பற்றி கோவா சட்டமன்ற துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ கூறுகையில், ‘மனோகர் பாரிக்கரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டடுள்ளது. சற்று மோசமான உடல்நிலையில் தான் அவர் இருக்கிறார். கடவுள் அருளால்தான் அவர் வாழ்ந்து வருகிறார்' என கூறினார். இதனால் தற்போது கோவா அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)