hgjnhgvjnhgf

Advertisment

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கணைய புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் மனோகர் பாரிக்கருக்கு புற்றுநோய் முற்றிவிட்டதாகவும், அதனுடன் அவர் போராடி வருவதாகவும் கோவாவின் நகர திட்டத்துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் தற்போது கூறியுள்ளார். கோவா முதல்வராக அவர் பதவியேற்ற பின் உடல்நிலை மேலும் மோசமாகவே பின்னர் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் கடந்த மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மெலிந்த உடலுடன், மூக்கில் டியூப் பொருத்தப்பட்டு அவர் பட்ஜெட்டில் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் பரவியது குறிப்பிடத்தக்கது.