Advertisment

முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்

 Manohar Joshi passed away

மராட்டிய மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி காலமானார்.

மராட்டிய மாநிலம் சிவசேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் மனோகர் ஜோஷி. மராட்டிய மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள நந்தவி கிராமத்தில் 1937 டிசம்பர் இரண்டாம் தேதி பிறந்தார் மனோகர் ஜோஷி. அரசியலில்ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக கட்சிப் பணிகளில் இறங்கிய மனோகர் ஜோஷி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் உள்ள அனைத்து அவைகளுக்கும் தேர்வாகியுள்ளார்.

Advertisment

1995 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் மராட்டிய மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்தார். 1972 முதல் 1989 வரை மராட்டிய மாநில சட்ட மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். 2002-2004 வரையிலான காலகட்டத்தில் மக்களவை சபாநாயகராகவும் பதவி வகித்தார். தற்போது 86 வயதான நிலையில் மாரடைப்பு காரணமாக மும்பையில் அவர் காலமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisment
manohar marathi shivsena
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe