Skip to main content

"அந்த சொல்லையே ஏற்கவில்லை, பின் எப்படி அதனை சரிசெய்ய முடியும்" மத்திய அரசை விமர்சித்த மன்மோகன் சிங்...

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

பொருளாதார மந்தநிலை என்ற ஒரு சொல்லையே மத்திய அரசு ஏற்றுக்கொள்ளாதபோது, அதனை எப்படி சரி செய்ய முடியும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

manmohan singh speech in backstage book release function

 

 

பொருளாதார நிபுணரும், திட்ட கமிஷன் முன்னாள் துணைத் தலைவருமான மான்டேக் சிங் அலுவாலியா எழுதிய "பேக்ஸ்டேஜ்" என்ற புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மன்மோகன் சிங் புத்தகத்தை அறிமுகப்படுத்தி பேசினார். அப்போது, "பொருளாதார பிரச்சனைகளை நாம் சரியாக அங்கீகரிக்காவிட்டால், அதற்கான சரியான தீர்வை கண்டுபிடிப்பது சாத்தியமற்றதாகிவிடும். நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை நாம் அடையாளம் காணவில்லை எனில், அதனை தீர்க்க நம்மால் சரியான நடவடிக்கை எடுத்து அதற்கான தீர்வை கண்டறிய முடியாது. அதுபோல தான் தற்போது உள்ள அரசு பொருளாதார மந்தநிலை என்ற ஒரு சொல்லையே ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியிருக்கும் போது, அரசால் பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாது என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஓய்வுபெற்றாலும் என்றுமே கதாநாயகன் தான்” - மன்மோகன் சிங்கிற்கு மல்லிகார்ஜுன கார்கே புகழாரம்!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Manmohan Singh is still a hero even after retirement says Mallikarjun Kharge

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் இன்று (03.04.2024) ஓய்வு பெறுகின்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெறுகின்றனர். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த 1991 ஆண்டு அக்டோபர் மாதம் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2019 ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.

மன்மோகன் சிங் இந்தியாவின் 14 ஆவது பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார். முன்னதாக இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், கடந்த 1991 ஆண்டு முதல் 1996 வரையிலான முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அதே சமயம் மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து, அந்த பதவிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மன்மோகன் சிங் ஓய்வு  பெற்றாலும், நடுத்தர மக்களுக்கு, இளைஞர்களுக்கும் எப்போதுமே கதாநாயகனாகவே திகழ்வார் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூகவலைதளப்பதிவில், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பணியாற்றிய நீங்கள் இன்று ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெறுவதால், ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது. உங்களை விட அதிக அர்ப்பணிப்புடனும் அதிக பக்தியுடனும்   தேசத்திற்கு சேவை செய்ததாக மிகச் சிலரே சொல்ல முடியும். தேசத்துக்காகவும், மக்களுக்காகவும் உங்களைப் போல் மிகச் சிலரே சாதித்திருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில், உங்கள் அமைச்சரவையில் அங்கம் வகித்தது எனக்குக் கிடைத்த பாக்கியம்.

நீங்கள் ஓய்வு பெற்றாலும், எப்போதும் நடுத்தர வர்க்கத்தினருக்கும், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் ஒரு ஹீரோவாகவும், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஒரு தலைவராகவும் வழிகாட்டியாகவும், உங்களின் பொருளாதாரக் கொள்கைகளால் வறுமையில் இருந்து மீண்டு வர முடிந்த ஏழைகள் அனைவருக்கும் ஒரு பயனாளியாகவும் இருப்பீர்கள். நீங்கள் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், நமது நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் ஒலிக்கும் குரலாகவே நீங்கள் எப்போதும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.   உங்களுக்கு அமைதி, ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
CM MK Stalin Thanks for Former PM Manmohan Singh

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் இன்று (03.04.2024) ஓய்வு பெறுகின்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெறுகின்றனர். கடந்த 1991 ஆண்டு அக்டோபர் மாதம் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு மன்மோகன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2019 ஆண்டில் இருந்து தற்போது வரை ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.

மன்மோகன் சிங் இந்தியாவின் 14 ஆவது பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பதவி வகித்து வந்தார். முன்னதாக, இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், கடந்த 1991 ஆண்டு முதல் 1996 வரையிலான முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அதே சமயம் மன்மோகன் சிங் ஓய்வைத் தொடர்ந்து, அந்த காலியிடத்திற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். சோனியா காந்தி முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நன்றி தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “அன்புள்ள முனைவர் மன்மோகன் சிங் அவர்களுக்கு, கடந்த 33 ஆண்டுகளாக மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராக தேசத்திற்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் எனது சார்பிலும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பதவிக் காலம் முழுவதும், பணிவு, புத்திசாலித்தனம் மற்றும் அரசியல் திறன் ஆகியவற்றின் அரிய கலவையை நீங்கள் வெளிப்படுத்தியுள்ளீர். அரசியல் பயணம் முழுவதும் மரியாதை மற்றும் பாராட்டைப் பெற்றீர்கள். உங்கள் தலைமைத்துவம், குறிப்பாக சவாலான காலங்களில், நான் உட்பட பலருக்கு உத்வேகம் அளித்தது. உங்கள் வாழ்க்கையின் புதிய கட்டத்திற்கு நீங்கள் மாறும்போது, இந்திய நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் உங்கள் மகத்தான பங்களிப்பில் நீங்கள் பெருமிதம் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

CM MK Stalin Thanks for Former PM Manmohan Singh

தி.மு.க. சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும், உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் நிறைவாக இருக்க வாழ்த்துகிறேன். உங்கள் அறிவாற்றல் மற்றும் தொலைநோக்குப் பார்வை மூலம் எங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.