Skip to main content

மன்மோகன் சிங் உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்...

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

manmohan singh health status

 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சுவலி காரணமாக நேற்றிரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சார்பில் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நாட்டின் பிரதமராக இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங். மேலும், பொருளாதார நிபுணரான இவர் ரிசர்வ் வங்கி ஆளுநராகவும், 90களில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர். 87 வயதான மன்மோகன் சிங், திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

மன்மோகன் சிங்கின் உடல்நலம் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், “மன்மோகன் சிங்கை இதயநோய்ப் பிரிவு சிறப்பு நிபுணர் பேராசிரியர் நிதீஷ் நாயக் தலைமையிலான மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது. மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவருக்கு அளிக்கப்பட்ட மருந்தால் திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், அதுகுறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். தேவையான சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவர்கள் கண்காணிப்பில்தான் மன்மோகன் உள்ளார்” எனத் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்