ஆதரவை வாபஸ் வாங்கிய சட்டமன்ற உறுப்பினர்கள்... மணிப்பூரில் கவிழும் நிலையில் பா.ஜ.க. அரசு...

manipur mla withdraw support to bjp

ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க.-வுக்கு வழங்கிவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதையடுத்து மணிப்பூர் சட்டசபையில் பெரும்பான்மையை இழந்து ஆட்சி கவிழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பா.ஜ.க.

60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டமன்றத்திற்குக் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை எந்தக் கட்சியும் பெறாத சூழலில், 21 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க. சிறுகட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் உதவியோடு ஆட்சியமைத்தது. இந்நிலையில், பா.ஜ.க.-வுக்கு ஆதரவளித்து வந்த தேசிய மக்கள் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மூன்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க.-வுக்கு வழங்கிவந்த ஆதரவைத் திடீரென வாபஸ் பெற்றுள்ளனர். இதனையடுத்து, சட்டசபையில் பா.ஜ.க. தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. இந்தச் சூழலில், 28 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ், விரைவில் பா.ஜ.க.-வுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்தத் திடீர் அரசியல் குழப்பம் காரணமாக, அம்மாநிலத்தில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

congress manipur
இதையும் படியுங்கள்
Subscribe