Advertisment

தீவிரவாதிகள் தாக்குதல் - மனைவி மகனுடன் துணை இராணுவப்படை அதிகாரி பலி!

manipur

மணிப்பூர் மாநிலத்தின் சுராசந்த்பூர் மாவட்டத்தில், அசாம் ரைபிள்ஸ் பிரிவின் அதிகாரியான கர்னல் விப்லாப் திரிபாதியை குறி வைத்து தீவிரவாதிகள் இன்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் விப்லாப் திரிபாதியோடு அவரது மனைவி மற்றும் மகனும் பலியாகியுள்ளனர்.

Advertisment

மேலும் அசாம் ரைபிள்ஸ் பிரிவின் நான்கு இராணுவ வீரர்களும் இந்த தாக்குதலில் வீர மரணமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த கோழைத்தனமான தாக்குதல் மிகுந்த வேதனையை அளிப்பதாகவும், இந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது எனவும் கூறியுள்ளார்.

Advertisment

மேலும், குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மணிப்பூரை மையமாக கொண்ட மக்கள் விடுதலை இராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு, இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

assam rifles manipur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe