ADVERTISEMENT

நண்பனை வீட்டிற்கு அழைத்துவர இளைஞர் செய்த ஐடியா... எச்சரித்த போலீஸ்...

03:24 PM Apr 13, 2020 | kirubahar@nakk…


ஊரடங்கால் தனியே தங்கியிருந்த தனது நண்பனை, யாருக்கும் தெரியாமல் சூட்கேஸுக்குள் வைத்து தனது வீட்டிற்கு அழைத்துவந்த மாணவனை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகம் முழுவதும் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால், 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், 4.2 லட்சம் பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 9000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 850-க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கரோனா வேகமாகப் பரவிவரும் சூழலில், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு மற்றும் கரோனா பரவல் குறித்த அச்சம் காரணமாக பெரும்பாலான அடுக்குமாடிக் குடியிருப்புகளில் புதிய நபர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. இந்தச் சூழலில், ஊரடங்கால் தனியே தங்கியிருந்த தனது நண்பனை, யாருக்கும் தெரியாமல் சூட்கேஸுக்குள் வைத்து தனது வீட்டிற்கு அழைத்துவந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

மங்களூரு பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த ஒரு மாணவர் நேற்று சந்தேகத்திற்கிடமான பெட்டி ஒன்றை இழுத்துக்கொண்டு குடியிருப்பு பகுதிக்குள் சென்றுள்ளார். இதனைப் பார்த்துச் சந்தேகமடைந்த அங்கிருந்த குடியிருப்பு காவலர்கள், மாணவரின் பெட்டியைத் திறந்துகாட்டச் சொல்லியிருக்கிறார்கள், முதலில் பெட்டியைத் திறக்க மறுத்த அந்த மாணவர், பின்னர் பெட்டியைத் திறந்துள்ளார். உள்ளே இன்னொரு மாணவர் பெட்டியில் சுருண்டு படுத்தவாறு இருந்துள்ளார். இதனையடுத்து, உடனடியாகக் குடியிருப்பு காவலர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து அங்கு வந்த போலீசார், மாணவனிடம் இதுகுறித்து விசாரித்தபோது, நண்பனைத் தனது வீட்டிற்கு அழைத்துவர இவ்வாறு செய்ததாகக் கூறியுள்ளான். பின்னர் மாணவர்களை இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT