கரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாகப் பள்ளிக்கு செல்லும் மகளைமுன்னாள் எம்.எல்.ஏ மங்கள வாத்தியத்துடன்அனுப்பி வைத்தசம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியின்முன்னாள் எம்.எல்.ஏ விஷ்ணுவர்தன் ரெட்டி. இவரது மகள் ஜனஸ்ரீ ரெட்டி எட்டாம் வகுப்பு படித்துவரும் நிலையில் கரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்தே பள்ளி வகுப்புகளை ஆன்லைன் மூலம் படித்து வந்தார். இந்நிலையில் இரண்டு ஆண்டு கரோனா தாக்கத்திற்குப் பிறகு பள்ளி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் தந்தை விஷ்ணுவர்தன் ரெட்டி மங்கள வாத்தியம் முழங்க மகளை காரில் ஏற்றி பள்ளிவரை வாத்தியத்தோடு கொண்டு சென்றுபள்ளியில் விட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மகளுக்கு பள்ளி சென்றுவர கார் ஒன்றையும் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் முன்னாள் எம்.எல்.ஏ.