
புதுச்சேரியில் மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து பணம் திருடியவருக்கு ஆயுள் தண்டனை கொடுத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதுச்சேரி பாகூரைச்சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒருவர் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது கடலூர் அருகேயுள்ள பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் என்பவரது மகன் சிலம்பரசன் (25) என்பவர் மூதாட்டியைக் கடுமையாகத்தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டதுடன், மூதாட்டியைக் கொடூரமாகப் பாலியல்வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் பாகூர் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புதுச்சேரி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி இளவரசன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி சிலம்பரசனுக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376(2)ன் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ. 5000 அபராதமும்மற்றும் பிரிவு 394ன் கீழ் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 5000 அபராதமும் மற்றும் பிரிவு 506(ii) மற்றும் 324ன் கீழ் இரண்டு ஆண்டுகள் மற்றும் 1 ஆண்டு தண்டனையும் வழங்கப்பட்டது. அனைத்து தண்டனைகளும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)