The man who came to the hospital carrying a snake on his shoulder in bihar

பீகார் மாநிலம், பாகல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் மண்டல். இவர், உலகின் மிகக்கொடிய விஷமுள்ள பாம்பான கண்ணாடி விரியன் பாம்பின் வாய் பகுதியை பிடித்து தனது தோளில் போட்டுக் கொண்டு அங்குள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனை கண்ட மருத்துவர்களும், நோயாளிகளும் அரண்டு போய் பதறியடித்து ஓடியுள்ளனர்.

Advertisment

தன்னை கண்ணாடி விரியன் பாம்பு கடித்துவிட்டதாகவும், தனக்கு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறும் மருத்துவர்களிடம் பிரகாஷ் கூறியுள்ளார். பாம்பை கையிலேயே வைத்திருந்தால் சிகிச்சை அளிக்கமுடியாது என்று கூறி மருத்துவர்கள் மறுத்துள்ளனர். உடனே, பிரகாஷ், தரையில் படுத்துக்கொண்டு தனக்கு பக்கத்திலேயே பாம்பையும் போட்டு சிகிச்சை அளிக்குமாறு வலியில் துடித்துள்ளார். பாம்பை விடுவித்தால் சிகிச்சை அளிப்பதாக மருத்துவர்கள், அவரிடம் கூறியதையடுத்து, அந்த பாம்பை அவர் விடுவித்தார்.

Advertisment

இதனையடுத்து, பிரகாஷுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தன்னை கடித்த கண்ணாடி விரியன் பாம்பை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.