உ.பி மாநிலம் லக்னோ பகுதியை சேர்ந்தவர் பியூஷ் வர்ஷ்னே. இவர் கடந்த ஆக., 27ம் தேதி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணியவில்லை என இவருக்கு இ-செல்லான் அனுப்பப்பட்டது. இ செல்லான் என்பது குறிப்பிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் கேமராவில் பதிவாகும் காட்சிகளை வைத்து போலீசார் தரப்பில் விதிகளை மீறிய வாகனங்களுக்குத் தானாக எலக்ட்ரானிக் முறையில் அபராதம் விதிப்பதாகும். காரில் சென்ற இவருக்கு ஹெல்மெட் போடவில்லை என இ- செல்லான் அனுப்பப்பட்டுள்ளது. இதைப் பார்த்துப் அதிர்ந்த இவர் உடனடியாக போலீசில் இது குறித்துச் சொல்லியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் காரில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து செல்லும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இது குறித்து அவர் கூறும் போது, "எனக்கு இ- செல்லான் வந்ததிலிருந்து பயமாக இருக்கிறது. தற்போது அபராத தொகை வேறு அதிகமாக இருப்பதால் என்ன செய்வது என்று தெரியவில்லை. போலீசார் கூறியது போல் இப்படியாகத் தெரியாமல் என் மீது அபராதம் விழுந்தாலும் அதைப் பார்த்தால் எனக்குப் பதற்றம் ஏற்பட்டுவிடும். அதனால் எந்த பிரச்னையும் வேண்டாம் என காரிலும் ஹெல்மெட் போடும் பழக்கத்தை ஏற்படுத்தி விட்டேன்" எனக்கூறினார்.