Advertisment

நாடாளுமன்றத்தில் கத்தியுடன் நுழைய முயன்ற மர்ம நபரால் பரபரப்பு...

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் கத்தியுடன் நுழைய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

man tries to enter in parliament with knife

டெல்லியில் மிகுந்த பாதுகாப்பு உடைய பகுதிகளில் ஒன்றான நாடாளுமன்ற பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் வந்துள்ளார். ரேம் ரஹீம் என்று கோஷம் எழுப்பியபடி அந்த நபர் நாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடமிருந்து கத்தி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisment

பிடிபட்ட நபர் டெல்லி லக்‌ஷ்மி நகரில் வசிக்கும் சாகர் இன்ஸா என்று தெரியவந்துள்ளது. பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் டேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான சாமியார் குர்மீத் ராம் ரஹீமின் ஆதரவாளர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Parliament ram rahim
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe