/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/finn.jpg)
ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டியதற்காக அபராதம் விதித்த போலீஸை, நபர் ஒருவர் தாக்கும் சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானேவைச் சேர்ந்த 56 வயது நபர் ஒருவர், ஹெல்மெட் போடானல் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். அப்போது போக்குவரத்து போலீஸ், அவரை நிறுத்தி அபராதம் வித்துள்ளனர். இதனால், அந்த நபர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த நபர் போலீசாரை காலால் எட்டி உதைத்தும் தாக்குதல் நடத்தவும் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர். இதற்கிடையில், தனது கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி மருத்துவச் சான்றிதழ்களை அவரது மனைவி போலீசில் ஒப்படைத்தார்.இதையடுத்து, அந்த நபரின் மருத்துவச் சான்றிதழ்களை ஒப்படைத்து அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும்படி ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு போலீசாரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)