செல்போன் பேட்டரி, ஆணியை விழுங்கிய நபர்! - திருமண ஆசையில் விபரீதம்

மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு செரிமானம் ஆகாத பொருட்களை விழுங்கிய நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

tantric

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தோயி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் திவிவேதி. இவருக்கு 42 வயதாகியும் திருமணமாகவில்லை. தொடர்ந்து உடல்நலக் குறைவின்மையால் தவித்து வந்த அஜய், தனது யாரோ சூனியம் வைத்திருக்கிறார்கள் என அஞ்சி, மந்திரவாதி ஒருவரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு தருவதாகக் கூறிய மந்திரவாதி, அஜய்க்கு ஒவ்வொரு நாளும் செல்போன் பேட்டரி, வயர், சாவி, இரும்பு ஆணிகளை சாப்பிடத் தந்துள்ளார். அஜய்யும் தன்னைப் பிடித்துள்ள சூனியம் விலக, மந்திரவாதியின் பேச்சை அப்படியே கேட்டு நடந்துள்ளார். ஆனால், சில நாட்களிலேயே அஜய்யின் வயிறு மிக மோசமாக வலிக்கத் தொடங்கியுள்ளது.

tantric

இதையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அஜய்யின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அறுவைச் சிகிச்சை நடத்தி, அஜய் வயிற்றில் இருந்த பொருட்கள் தற்போது முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், அஜய் உயிருக்கு ஆபத்தான நிலையில், இன்னமும் சிகிச்சை பெற்றுவருகிறார்.

tantric uttarpradesh
இதையும் படியுங்கள்
Subscribe