Advertisment

இறப்பு சான்றிதழில் ஒளிமயமான எதிர்காலம்... வைரலாகும் இறப்பு சான்றிதழ்!

உத்தரபிரதேசத்தில் இறப்பு சான்றிதழில் ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் என்று கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்து போட்டு இருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ளது சிர்வாரியா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி சங்கர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

Advertisment

இந்நிலையில், அவரின் மகன் அவருக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் மனு செய்துள்ளார். மனுவை பரீசிலித்த அவர், இறப்பு சான்றிதழ் வழங்கினார். ஆனால் கூடவே அதில் ஒளிமயமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் என்று அச்சிடப்பட்டிருந்தது. இறப்பு சான்றதழில் இந்த வாசகம் தேவையா என்று தற்போது இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

VIRAL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe