ADVERTISEMENT

மதுக்கடை முன்பு நின்றவர்கள் மீது பூக்களை தூவிய இளைஞர்... வெளியான அடேங்கப்பா காரணம்!

07:03 PM May 05, 2020 | suthakar@nakkh…



கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், தற்போது ஒருசில இடங்களில் இந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி மற்றும் அசாமில் மதுக் கடைகளை திறக்க அம்மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. இதனால் இந்த மாநிலங்களில் நேற்று முதல் மது விற்கப்பட்டு வருகின்றது. நேற்று காலையில் இருந்தே மது பிரியர்கள் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி சென்றனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்நிலையில் டெல்லி சந்தர் நகர் பகுதியில் உள்ள மதுக்கடை முன்பு, இன்று காலை ஏராளமான குடிமகன்கள் மது வாங்குவதற்காக வரிசையில் நின்றுள்ளனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அங்கே நின்றவர்கள் மீது பூக்களை தூவி வரவேற்றார். "நீங்கள்தான் நமது நாட்டின் பொருளாதாரம், அரசாங்கத்திடம் இப்போது போதுமான பணம் இல்லை. நீங்கள்தான் அவர்களுக்கு வருவாயை அள்ளித்தர வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT