Skip to main content

பார்சலில் வந்த பாம்பு... பதட்டத்தில் நெஞ்சடைத்து போன இளைஞர்..!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019


ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா பகுதியைச் சேர்ந்தவர் ராம் சரண். இவர் தற்போது ஒடிசா மாநிலம் பூடாவ் பஞ்ச் பகுதியில் வசித்து வருகிறார். ராம் சரணுக்கு சமீபத்தில் குண்டூரில் இருந்து பார்சல் ஒன்று வந்துள்ளது. இதை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்ற அவர், வீட்டின் மாடியில் அமர்ந்துகொண்டு பார்சலை ஆர்வத்துடன் திறந்து பார்த்துள்ளார். அதில் வீட்டு உபயோகப் பொருட்கள் இருந்துள்ளன. அதை ஒவ்வொன்றாக வெளியே எடுத்த போது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பார்சலின் அடியில் இருந்து 4 அடி நீளமுள்ள விஷப் பாம்பு ஒன்று திடீரென்று எழுந்து பார்சலுக்கு வெளியே தலையை நீட்டியது.
 

fn



இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், விஷப் பாம்பை லாவகமாக பிடித்துச் சென்று வனப்பகுதிக்குள் விட்டனர். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ராம் சரண் உடல்நிலைக் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், பார்சலை கொடுத்த நிறுவனத்திடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சியில் வீட்டுக்குள் புகுந்த 7 அடி நீளப் பாம்பு!  

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
A 7-foot-long snake entered the house in Trichy

திருச்சி விமான நிலையம் காமராஜ் நகர் அந்தோணியார் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் இன்று காலை வீட்டில் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஹாலில் மேசை மீது இருந்த பொருட்கள் திடீரென தவறி விழுந்தன. சப்தம் கேட்டு ஹாலுக்கு வந்து பார்த்தபோது, மேசை மீது சுமார் 7 அடி நீளப் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டு இருந்தது. உடனே அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த அவர், கதவை சாத்தினார்.

அக்கம் பக்கத்தினர் வந்து வீட்டுக்குள் பாம்பை தேடிய போது எங்கோ பதுங்கிக் கொண்டது. பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இதனை அடுத்து விரைந்து வந்த திருச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியவர்த்தன் தலைமையிலான வீரர்கள், சுமார் அரை மணி நேரம் போராடி வீட்டுக்குள் இருந்த பாம்பை மீட்டனர். பின்னர் பாம்பு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் இதே போன்றதொரு பாம்பு வனத்துறையால் பிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

குளிர்சாதனப் பெட்டியில் படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பு!

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
A nice snake that took a picture in a refrigerator near Cuddalore

கடலூர் அருகே செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயச்சந்திரன். இவரது வீட்டில் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த அவர் உடனடியாக பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் பாம்பு பிடி வீரர் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு உடனே வந்தார். அப்போது வீட்டில் எங்கு தேடியும் பாம்பு கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் கீழே குச்சியை விட்டுத் தட்டியபோது, திடீரென குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் பாம்பு ஏறி படம் எடுத்தது. இதனைப் பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே பாம்பைப் பிடிக்க பத்து நிமிடம் போராடி, பாம்பு பிடி வீரர் பாம்பைப் பிடித்து ஒரு டப்பாவில் அடைத்தார். பாம்பு படம் எடுத்து ஆடியபோது, அங்கிருந்தவர்கள் சூடம் ஏத்தி வழிபட்டனர். பாம்பு குளிர்சாதனப் பெட்டியில் படம் எடுத்து ஆடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போராடி பாம்பைப் பிடித்த பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு அனைவரும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்