கரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நிதித்தேவை ஏற்பட்டுள்ளதால் ஒற்றுமையின் சிலை விற்பனைக்கு வந்துள்ளது எனக்கூறி Olx -ல் விளம்பரம் பதிவிட்ட நபர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
உலகையே புரட்டிப் போட்டுள்ள கரோனா வைரசால் 204 நாடுகளில் சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,000-ஐ கடந்துள்ளது. 2,64,000 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இந்தியாவைப் பொறுத்தவரை 4000க்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 109 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர்.நாடு முழுவதும் வேகமாகப் பரவி வரும் இந்தக்கரோனாவைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 14 வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலை எதிர்த்துப் போராட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நிதித்தேவை ஏற்பட்டுள்ளதால் ஒற்றுமையின் சிலை விற்பனைக்கு வந்துள்ளது எனக்கூறி Olx -ல் விளம்பரம் பதிவிட்ட நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குஜராத்தில், 182 மீட்டர் உயரத்துடன், உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமைமிகு இந்த சிலை கடந்த 2018 ல் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.ஆயிரக்கணக்காகச் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுச் செல்லும் இந்தச் சிலையை நிதிப்பற்றாக்குறை காரணமாக ரூ. 30,000 கோடிக்கு விற்பனை செய்வதாக ஒரு நபர் Olx ல் விளம்பரம் செய்துள்ளார். இந்த விவகாரம் செய்தித்தாள்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய சூழலில்,அந்த விளம்பரம் நீக்கப்பட்டுள்ளது.மேலும், குஜராத்தின் நர்மதா மாவட்டப் போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விளம்பரத்தைப் பதிவிட்ட நபரைத் தேடி வருகின்றனர்.