Advertisment

இளம் பெண்ணிடம் ரயில் நிலையத்தில் அத்துமீறல் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலிசார் விசாரணை!

இளம் பெண்ணிடம் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக பொது இடங்களில் பெண்களிடம் சிலர் அத்துமீறும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. இதே போன்று ஒரு சம்பவம் மும்பை புறநகர் ரயில் நிலையத்தில் தற்போது நடைபெற்று உள்ளது. நேற்று முன்தினம், இளம்பெண் ஒருவர் மும்பையின் மாதுங்கா ரயில் நிலையத்தில் நடைமேடையில் நடந்து சென்றுள்ளார்.

Advertisment

அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அவரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். அந்த பெண் கூச்சலிடவே அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Train
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe