Advertisment

எச்சிலை துப்பி சப்பாத்தி செய்த நபர்; திருமண விழாவில் நடந்த வினோதம்!

A man made chapati by spitting in uttar pradesh

Advertisment

திருமண விழாவின் போது, எச்சிலை துப்பி சப்பாத்தி தயார் செய்த சம்பவம் வெளிவந்ததையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் போஜ்பூர் பகுதியில் வினோத் குமார் என்பவரின் மகளுக்கு கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணா விழாவில், ஃபர்மான் என்ற நபரை சப்பாத்தி தயாரிப்பாளராக, சமையல்காரர்கள் பணியமர்த்தினர். ஆனால், ஃபர்மான் சப்பாத்தி மாவை தயாரிக்கும் போது ஒவ்வொரு சப்பாத்திக்கும் தனது எச்சிலை துப்பியுள்ளார்.

இதை, அங்கு சாப்பிட வந்த சில பேர் மறைந்திருந்து தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, போலீசார் ஃபர்மான் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட ஃபர்மான் காசியாபாத்தில் உள்ள சைத்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

marriage rotti
இதையும் படியுங்கள்
Subscribe