கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். மழை தொடர்பான பாதிப்புக்களை ஆய்வு செய்யும்பொருட்டு இன்று வயநாடு சென்ற ராகுல் காந்தி, சாலை மார்க்கமாக மழைால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு ஆதரவாளர் காரினுள் இருந்த ராகுலுக்கு கைகுலுக்கி முத்தம் கொடுத்தார். இதனால் பதட்டமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அப்புறபடுத்தினார்கள். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ராகுல் வயநாடு தொகுதியில் இருந்து கடந்தநாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.