Advertisment

பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற அச்சத்தில் மனைவியை கொன்ற கணவன்!

பெண் குழந்தை பிறந்து விடுமோ என்ற பயத்தில் கணவனே மனைவியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் உ.பி-யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்தவர் குமார். அவருடைய மனைவி ஊர்மிளா. இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஊர்மிளா தற்போது கர்ப்பமாக இருந்த நிலையில், மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தையாக இருந்து விடுமோ என்று சந்தேகம் அடைந்த அவரின் கணவர், அவரிடம் சச்சரவில் ஈடுபட்டுள்ளார்.

Advertisment

ஒரு கட்டத்தில் இந்த சண்டை உச்சகட்டம் அடைந்த நிலையில், குமார் தன்னுடைய மனைவி ஊர்மிளாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவவத்தை பார்த்த அவரின் மூத்த மகள் நடந்த சம்பவத்தை தன்னுடைய பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையிடம் அவர் புகார் தெரிவிக்கவே, குமாரை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

murder
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe