Advertisment

திருமணம் செய்துகொள்ள மறுத்த பெண்ணின் குழந்தையைக் கடத்தி மிரட்டல்!

திருமணம் செய்துள்ள மறுப்பு தெரிவித்த பெண்ணின் குழந்தையைக் கடத்தி மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

child

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

மேற்கு டெல்லியில் உள்ள மது விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ஷிவ்குமார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்து வசிக்கும் இளம்பெண்ணிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தார். ஆனால், அதை அந்தப் பெண் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இந்நிலையில், கடந்த ஜூன் 16ஆம் தேதி ரம்ஜான் வாழ்த்து சொல்வதற்காக பெண்ணின் வீட்டிற்கு ஷிவ்குமார் சென்றுள்ளார். அங்கு பெண்ணிடம் வாழ்த்து தெரிவித்த ஷிவ்குமார், மீண்டும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்க, அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த பெண்ணின் 4 வயது குழந்தையை ஷிவ்குமார் கடத்திச் சென்று, தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு மிரட்டியுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், குழந்தையைக் கடத்திய ஷிவ்குமார் கன்னவுட் பகுதியில் பதுங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டு, ஷிவ்குமாரையும் கைது செய்தனர். இதுகுறித்து ஷிவ்குமாரிடம் நடத்திய விசாரணையில், அழுத்தம் தந்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மிரட்டுவதற்காக குழந்தையைக் கடத்தியதும், கொல்கத்தா செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்ததும் தெரியவந்தது.

Child trafficking
இதையும் படியுங்கள்
Subscribe