மராட்டிய மாநிலம் வடக்கு மும்பை பகுதியில் குர்லா போஸ் ரயில் நிலையம் அமைந்துள்ளது. கூட்ட நெரிசல் எப்போதும் அதிகமாக இருக்கும் அந்த ரயில் நிலையத்தில் இன்று காலை வழக்கத்தை விடவும் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது ரயிலின் வருகையை பார்த்துக்கொண்டு பயணிகள் நின்றுகொண்டிருக்கு அங்கே நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென தண்டவாளத்தில் குதித்து குப்புறபடுத்துக் கொண்டார்.
அந்தநிலையில் விரைவாக வந்த ரயில் ஒன்று அவர் மீது ஏறியதில் அவர் உடலி சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் பயணிகள் அலறியடித்து ஓட பதற்றமான சூழல் உருவானது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது.
Follow Us