உத்தராகண்டில் கோயிலுக்குள்வழிபடச் சென்றபட்டியலினஇளைஞரைக் கடுமையாகத்தாக்கிய கும்பல்.
உத்தராகண்ட், உதர்காசி மாவட்டத்தில் பைனொல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயுஷ்(22). இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். ஆயுஷ் இறை வழிபாடு செய்ய கடந்த 9 ஆம் தேதி, பக்கத்து கிராமமான சல்ராவுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள பிரபலமான கோயில் ஒன்றில் இறை வழிபாடு செய்வதற்காக ஆயுஷ் உள்ளே நுழைந்தபோது, அந்த கிராமத்தில் இருக்கும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆயுஷ் உள்ளே நுழைய முயன்றபோது,எரிந்துகொண்டிருந்த தீப்பந்தத்தைக் கொண்டு கடுமையாகத்தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த ஆயுஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்துசம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார்அளித்துள்ளார் ஆயுஷ். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.