சாலையில் சென்ற நபரின் தலையில் சைக்கோ மனிதன் கட்டையால் தாக்கிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகில் உள்ள மாஹிகுடா பகுதியில் இளைஞர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த ஒரு இளைஞர் அவரின் தலையில் கட்டையால் ஓங்கி அடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய அந்த இளைஞர் அந்த இடத்திலேயே மயங்கி சரிந்தார். சரிந்து விழுந்தவரை மீண்டும் அவர் தாக்க முயல அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற ஓடிவந்துள்ளார்கள்.
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இதைபார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். படுகாயம் அடைந்து சாலையில் கிடந்த அந்த இளைஞரை மீட்ட பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், விசாகப்பட்டினத்தை சேர்ந்த ரவீந்தர் என்பவர் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என்பதை கண்டுபிடித்துள்ளார்கள். எதற்காக இந்த தாக்குதலில் அவர் ஈடுபட்டார் என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)