ADVERTISEMENT

"ஒரு கிலோ சாணம், ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர் ரூ.500" அமோகமாக நடந்த விற்பனை...

03:49 PM Mar 17, 2020 | kirubahar@nakk…

நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் மாட்டுச் சிறுநீர் மற்றும் சாணம் ரூ.500 வரை விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 7,171 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1.8 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 129 பேரைப் பாதித்துள்ளது. இந்நிலையில் மாட்டுச் சிறுநீர் மற்றும் சாணம் கரோனா வைரசிடம் இருந்து நம்மைக் காக்கும் என ஒருசில இந்து அமைப்பினர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், மேற்குவங்கத்தில் மபூத் அலி என்ற பால் வியாபாரி பசுவின் சாணத்தைப் பாக்கெட்டில் அடைத்தும், சிறுநீரைப் பாட்டிலில் நிரப்பியும் விற்பனை செய்து வருகிறார்.

ஒரு கிலோ சாணம் மற்றும் ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீர் காம்போ பேக்காக 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசியிருந்த மபூத் அலி, "என்னிடம் ஒரு இந்தியப் பசு, ஒரு ஜெர்சி பசு உள்ளது. பால் விற்பனை மூலம் சம்பாதித்து வருகிறேன். ஒருநாள் இந்து மகா சபை நடத்திய கோமுத்ரா நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். அதன்பிறகுதான் சாணம் மற்றும் கோமியத்தை விற்பனை செய்து சம்பாதிக்கலாம் என உணர்ந்தேன். நாட்டுப் பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்திற்கு இருக்கும் வரவேற்பு ஜெர்ஸி பசுவின் சிறுநீருக்கு இல்லை" எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதநம்பிக்கைகளை வைத்து ஏமாற்றுவதாக கூறி ஹூக்ளி போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT