விமானத்தின் முன் படுத்து மறியல் செய்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் மத்தியபிரதேசத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள போக் விமான நிலையத்தில் சுமார் 46 பயணிகளுடன் பயணிகள் விமானம் ஒன்று தில்லிக்கு புறப்பட தயாரானது. அப்போது திடீரென விமானத்தின் முன் படுத்த இளைஞர் ஒருவர் விமானத்தை எடுக்க கூடாது என்று கூறி கத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமான நிலைய ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல்கள் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலிசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விமானம் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர். இந்நிலையில், இளைஞரிடம் விசாரணை நடத்திய போலிசார் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை கண்டுபடித்தனர்.
Follow Us