கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திற்கு உட்பட்ட சம்பக்குளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த இருவரை தெருநாய் ஒன்று கடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் கடித்த நாயை அவரே லாவகமாக பிடித்து எடுத்துச் சென்றார்.
உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பொழுது அந்த நாய்க்கு வெறி பிடித்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக அந்த நாய் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் வெறிநாய் கடிக்கு ஆளான இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் வேறு சிலரை யாரையாவது இந்த வெறிநாய் கடித்துள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தற்பொழுது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.