Advertisment

குழந்தைகள் நலனுக்காக கொன்றேன்! - மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்

மகளை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட தந்தை, தனது மனைவியை குத்திக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Murder

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

அசாம் மாநிலம் திபுர்கார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூர்னா நாகர் தேகா(வயது 38). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது மகளை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். 9 மாதங்கள் சிறையில் கழித்த பூர்னா, கடந்த ஜூன் 6ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். அப்போது இதே வழக்கு தொடர்பாக வெள்ளிக்கிழமை திபுர்கார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான பூர்னா, தனது மனைவி ரீட்டா நாகர் தேகாவை (வயது 33) கூர்மையான ஆயுதத்தால் தாக்கினார். இதில் வயிற்றில் காயம் ஏற்பட்ட ரீட்டா மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.

நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர் முன்னிலையிலேயே நடந்த இந்த கோர சம்பவத்தை அடுத்து, பூர்னா மீது கொலை வழக்கு பதியப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக காவல்துறையினரிடம், ‘ஜாமீனில் வெளிவந்ததில் இருந்து என்னை ரீட்டா வீட்டிற்குள் செல்லவோ, குழந்தைகளைப் பார்க்கவோ அனுமதிக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்திருந்தபோது, என்னை சிறைக்கு அனுப்பிய ரீட்டாவுக்கு எனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைக்கலப்பாக மாறியது. என் குழந்தைகளின் நலனுக்காக அவளை அங்கேயே குத்திக் கொன்றேன்’ என பூர்னா வாக்குமூலம் அளித்துள்ளார்.

Assam sexual harassment Child abuse murder
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe