Advertisment

100 தோப்புக்கரணங்கள் போட தயாரா..? மோடிக்கு மம்தா கேள்வி...

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். இதில் "ஜனநாயகத்தின் வழியாக பிரதமரை ஓங்கி அறைய வேண்டும் என்று" பேசினார். அதன் தொடர்ச்சியாக இன்று மேற்கு வங்க தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றமோடி ,"மம்தாவிடம் அறை வாங்கினால் கூட ஆசீர்வாதமாகத் தான் எண்ணுவேன்" என்று பதில் கூறினார்.

Advertisment

mamta questions modi on coal scam issue

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மேலும் இதற்கு முன் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் நிறைய முறைகேடான நிலக்கரி சுரங்கங்கள் இயங்கி வருகிறது. இதை வைத்து தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பலர் சம்பாதித்து வருகின்றனர் என குற்றம் சாட்டினார். இதற்கு தற்போது பதிலளித்துள்ள மம்தா பானர்ஜி, "எங்கள் மீதான நிலக்கரி மாபியா குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் 100 தோப்புக்கரணம் போட தயாராக உள்ளீர்களா?" என பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்டுள்ளார். இவ்விரு தலைவர்களும் அடுத்தடுத்து இப்படி பேசிக்கொள்வது அரசியல் வட்டாரத்தில் புதுமையாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

mamta banarji modi loksabha election2019
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe