Advertisment

போராட்டத்தில் இறங்கிய மம்தா!

mamata banerjee

Advertisment

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதிதொடங்கி பல்வேறு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்துவிட்ட நிலையில், ஐந்தாம் கட்ட தேர்தல் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கிடையே, முஸ்லிம்கள்தங்கள் வாக்குகளைப் பிளவுபடாமல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்க வேண்டும் என கூறியது தொடர்பாக விளக்கம் கேட்டும்,மத்திய படைகள்பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்தும், அதுகுறித்து விளக்கம் கேட்டும் இந்திய தேர்தல் ஆணையம் மம்தாவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்தநிலையில், மம்தா பானர்ஜியின் பேச்சுக்கள், மாநிலம் முழுவதும் சட்ட ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் எனக் கூறி, நேற்று(12/04/2021) இரவு 08.00 மணி முதல் இன்று இரவு 08.00 மணி வரை தேர்தல் பிரச்சாரம்செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

Advertisment

இந்தத் தடையை தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத, அரசியலமைப்பற்ற முடிவு என விமர்சித்த மம்தா, தேர்தல் ஆணையத்தின் முடிவைக் கண்டித்து கொல்கத்தா காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தார். அதேபோல் அவர் தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Assembly election election commission Mamata Banerjee
இதையும் படியுங்கள்
Subscribe