Skip to main content

போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார் மம்தா!

Published on 04/02/2019 | Edited on 04/02/2019
mamta police


நேற்று காவல்துறை ஆணையரிடம் சாரதா சிட் ஃபண்ட் மோசடி குறித்து விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகளை அம்மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை அடுத்து, கொல்கத்தாவிலுள்ள காவல் ஆணையர் இல்லத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி  ‘ஜனநாயகத்தை காப்போம்’ எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனால் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

நேற்றிரவிலிருந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ள மம்தா, இன்று காலை சிறிது நேரம் மட்டும் இடைவேளை எடுத்துகொண்டு பின்னர் மீண்டும் தர்ணாவில் ஈடுபட்டார். தர்ணாவில் ஈடுபட்டுள்ள மம்தாவை மறைமுகமாக இருக்கிறார் என்று சொல்லப்பட்ட காவல் ஆணையர் ராஜீவ் குமார் மம்தாவை சந்தி பேசிவிட்டு சென்றார். என்னதான் தர்ணாவில் மம்தா இருந்தாலும் அலுவலகத்தில் பார்க்க வேண்டிய ஆவண கோப்புகளை, அந்த இடத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. 
 

“பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கொடுமைகளுக்கு எதிராகவே இந்த தர்ணா,எந்த தன்னாட்சி அமைப்புகளுக்கும் எதிரான போராட்டம் அல்ல” என்று மம்தா கூறியுள்ளார்.
 

இந்நிலையில்,  தர்ணா நடைபெறும் இடத்தில் சீர்மிகு பணிக்கான பதக்கங்களை போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் மம்தா பேனர்ஜி வழங்கி வருகிறார்.

 

 


 

சார்ந்த செய்திகள்