கரோனா தொற்றுப் பரவலால், இந்தியா முழுவதுமுள்ள பெரும்பாலான மாநிலங்களில்இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், அரசு மற்றும்அரசு உதவிபெறும் பள்ளிகளில், 12 ஆம் வகுப்பு படிக்கும்மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வியைப் பெற உதவும் வகையில், அவர்களுக்கு நவீனமொபைல் ஃபோன்கள்வாங்க, பத்தாயிரம்ரூபாய் வழங்கப்படும் எனமேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
மேற்கு வங்கமுதல்வர் மம்தாபானர்ஜிதலைமையில் நடைபெற்றகூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 9.5 லட்சம் மாணவர்களுக்கு, ரூபாய் 10,000 ஆயிரம் வழங்கப்படும் எனவும், மூன்று வாரத்திற்குள்மாணவர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.