Advertisment

உச்சநீதிமன்றத்தை நாடும் சிபிஐ -  மேற்குவங்க விவகாரம்

மேற்கு வங்கம் மாநிலத்தில் காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முறையிட சிபிஐ முடிவு செய்துள்ளது.

Advertisment

நேற்று காவல்துறை ஆணையரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகளை அம்மாநில காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதை அடுத்து, கொல்கத்தாவிலுள்ள காவல் ஆணையர் இல்லத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ‘ஜனநாயகத்தை காப்போம்’ எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனால் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில், சிபிஐ இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது. சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஷ்வரராவ் இதனை தெரிவித்தார். “மேற்கு வங்க மாநில போலீஸார் ஒத்துழைப்பு தரவில்லை. எனவே நாங்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

thirinamul congress west bengal mamta banarji
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe