prakash javadekar

Advertisment

"கொல்கத்தாவில் என்ன நடக்கிறது. இதற்கு முன்னர் இதுபோன்று விசாரணைக் குழுவை கைது செய்து போலீஸ் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்ததில்லை. இதுதான் ஜனநாயக படுகொலை. நாங்கள் மம்தாவை பார்த்து கேட்கிறோம், எதற்காக இந்த தர்ணா? யாரை காப்பாற்ற இந்த தர்ணா? காவல் ஆணையரையா அல்லது உங்களையா(மம்தா)?" என்று மேற்கு வங்கத்தில் நடக்கின்ற மம்தாவின் தர்ணாவை பாஜக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விமர்சித்தார்.

இதனை அடுத்து பேசியவர், ‘மம்தாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் எதிர்கட்சிகள் எல்லாம் கொள்கைகளால் வேறுபட்டு, ஊழலால் ஒற்றுமை அடைந்தவர்கள். ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள்’ என்று கூறினார்.