mamta

Advertisment

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி இன்று நடத்தும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 22 கட்சிகளின் தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர். மக்களவை தேர்தலை முன்னிட்டும், பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியாகவும் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, கொல்கத்தாவின் வரலாற்று சிறப்பு மிக்க 'பிரிகேட் பரேட்' மைதானத்தில் இன்று பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், அந்த கூட்டத்தில் லட்சக் கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டுள்ளனர். அந்த மைதானமே மக்கள் வெள்ளம்போல காணப்படுகிறது. தற்போது அந்த இடத்திற்கு விரைந்துள்ளார் இந்த பொதுக்கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தும் மம்தா பானர்ஜி. அவரை தொடர்ந்து ஒவ்வொரு தலைவர்களாக கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.