mamata - modi

இந்தியாவில் தினசரி ஒரு லட்சம் பேருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் மீண்டும் கரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில்பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் இன்று (08.04.2021) ஆலோசனை நடத்தவுள்ளார். கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளநிலையில், இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார்என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கதேர்தல் பிரச்சாரத்தில் அவர் கலந்துகொள்வதால், அவருக்குப் பதிலாக மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய கலந்துகொள்வார் என கூறப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டின் சார்பிலும், தமிழக தலைமைச் செயலாளர் ராஜிவ்ரஞ்சன் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.