Advertisment

கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்யாத மம்தா!

mamata banerjee

மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தொடங்கி பல கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுவருகிறது. இந்தத் தேர்தலில் மம்தா தலைமையிலானதிரிணாமூல்காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் எட்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்ட தேர்தலில், ஐந்து கட்ட தேர்தல்கள் ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையிலும், அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பு குறையவில்லை.

Advertisment

இந்தநிலையில், மேற்கு வங்கம்உட்பட இந்தியா முழுவதும், கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனையொட்டி கம்யூனிஸ்ட் கட்சி, மேற்கு வங்கத்தில் தாங்கள்நடத்த இருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தைக் கைவிட்டது. ராகுல் காந்தி, தனது மேற்கு வங்கபிரச்சாரக் கூட்டங்களைரத்து செய்தார். இந்தநிலையில், தற்போது மம்தா பானர்ஜிகொல்கத்தாவில் பிரச்சாரம் செய்யமாட்டார் என திரிணாமூல்காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Advertisment

கொல்கத்தாவில்பிரச்சாரத்திற்கான இறுதிநாளில் அடையாளகூட்டம் மட்டும் நடைபெறும் எனவும், மம்தாவின் எல்லா பொதுக்கூட்டத்தின் நேரமும் 30 நிமிடங்களாக சுருக்கப்படுவதாகவும் திரிணாமூல்காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Assembly election kolkata Mamata Banerjee west bengal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe