Advertisment

மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்கும் மம்தா!

k

Advertisment

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியாகின. தேர்தல் முடிவுகளின்படி மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மிகப்பெரும் வெற்றியை ஈட்டி ஆட்சியை தக்கவைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் 213 இடங்களை வென்று மாபெரும் வெற்றியை மீண்டும் பதிவு செய்துள்ளது.

Advertisment

இதனையடுத்து மம்தா பானர்ஜி எப்போது பதவியேற்பார் என எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், இன்று (05.05.2021) அவர் முதல்வராக பதவியேற்க உள்ளார். கடந்த 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் அவர் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

mamata banarjee
இதையும் படியுங்கள்
Subscribe