Advertisment

மோடியின் தாடியும், மம்தாவின் கிண்டலும்... வைரலாகும் பேச்சு...

mamata compares modi's beard and indian economy

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (27.03.2021) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில்294 தொகுதிகளுக்கு 8 கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக 30 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குறித்து மம்தா பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

மேற்கு வங்கத்தில் மெதானப்பூர் மாவட்டத்தில் உள்ள தாஸ்பூர் பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மம்தா, "நான் வாக்குப்பதிவு முடியும் வரை, அதாவது ஏப்ரல் 1ஆம் தேதி வரை நந்திகிராமில்தான் இருப்பேன். ஏனென்றால், பாஜகவினர் வெளிமாநில குண்டர்கள் மூலம் வாக்குகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். ஆதலால், திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

Advertisment

இந்தியப் பொருளாதாரம் கடினமான பாதையில் இருக்கிறது. தொழில்துறையில் எந்த வளர்ச்சியும் இல்லை. பிரதமர் மோடியின் தாடியில் உள்ள வளர்ச்சியைத் தவிர பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மாறாக, பிரதமர் மோடி தாடி வளர்த்துக்கொண்டிருக்கிறார். சில நேரங்களில் ரவீந்திரநாத் தாகூர் போல் உடை அணிகிறார். சில நேரங்களில் மகாத்மா காந்தி போல் உடை அணிகிறார்.

என்றாவது ஒருநாள் இந்த தேசம் முழுவதும் விற்கப்பட்டு, நரேந்திர மோடி பெயருக்கு மாற்றப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை. நாட்டில் ஜனநாயகத்தின் கழுத்தை பாஜக நெரிக்கிறது.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளிலும் பிரச்சாரங்களிலும் பரபரப்பாக இருக்கிறோம். ஆனால், அரசியலமைப்புச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டங்களை இயற்றி, டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைப் பறித்து, துணைநிலை ஆளுநருக்கு அதிகமான அதிகாரத்தை அளிக்கிறது பாஜக. இது வெட்கக்கேடானது. பாஜக என்பது பிக்ஸட் ஃபிராட் அன்ட் ஜன்ஜல் (குப்பை) கட்சி. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எந்த எல்லைக்கும் அந்தக் கட்சி செல்லும். வாக்குப்பதிவு முடிந்தவுடன் மக்களின் பணி முடிந்துவிடாது. இவிஎம் இயந்திரங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இயல்புக்கு மாறாக ஏதாவது நடந்தால், போராட்டத்தில் ஈடுபடுங்கள்" எனத் தெரிவித்தார்.

இன்று அம்மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்துவரும் சூழலில், மம்தாவின் இந்தப் பேச்சுஅதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

west bengal mamata banarjee
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe