தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் மம்தா!

mamata

மேற்கு வங்கத்தில் மார்ச் - ஏப்ரலில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திரிணாமூல்காங்கிரஸ் அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்தது. இந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில், தனது கட்சியிலிருந்து பாஜகவிற்கு தாவிய முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரியை எதிர்த்து மம்தா போட்டியிட்டார்.

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான அன்று, முதலில் மம்தா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் சுவேந்து அதிகாரி வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் முடிவினை எதிர்த்து வழக்கு தொடரப்போவதாக மம்தா, முடிவுகள் வெளியான அன்றே தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தான் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து மம்தா, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று (18.06.2021) விசாரணைக்கு வந்தது. இதன்பிறகு இந்த வழக்கு 24 ஆம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Assembly election highcourt Mamata Banerjee
இதையும் படியுங்கள்
Subscribe