Advertisment

தேர்தல் ஆணைய உத்தரவால் பிரச்சார கூட்டங்களை இரத்து செய்த மம்தா!

mamata banerjee

இந்திய தேர்தல் ஆணையத்தின் தடை உத்தரவால் பிரச்சாரக் கூட்டங்களை மம்தா இரத்து செய்துள்ளார்.

Advertisment

இந்தியாவில் கரோனாதொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வருட இறுதியில் இருந்து கட்டுக்குள் இருந்து வந்த கரோனாபரவல், இந்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் தீவிரமாகி வருகிறது. மேற்கு வங்கத்திலும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி கரோனாபாதிப்பு கிட்டத்தட்ட 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Advertisment

மேற்கு வங்கத்தின் கரோனாஅதிகரிப்புக்கு, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. மேற்கு வங்கத்தில் ஆறு கட்ட தேர்தல்கள் முடிந்து, இரண்டு கட்ட தேர்தல்கள் மீதமிருக்கும் நிலையில், மாநிலத்தில் கரோனாஅதிகரித்து வருவது குறித்தவழக்கைவிசாரித்த கொல்கத்தாஉயர் நீதிமன்றம், கரோனாபரவல் குறித்து நடவடிக்கை எடுக்குமாறுதேர்தல் ஆணையத்தைஅறிவுறுத்தியது.

இதனையடுத்துதேர்தல் ஆணையம், மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சியினரின் ஊர்வலங்கள், நடைபயணங்கள், பேரணிகள் உள்ளிட்டவற்றுக்கு தேர்தல் ஆணையம் நேற்று (22.04.2021) தடை விதித்தது. 500 நபர்கள் வரை பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டங்களுக்குமட்டுமேஅனுமதி என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து மம்தா, தனது அனைத்து பிரச்சாரக் கூட்டங்களையும் இரத்து செய்துள்ளார்.மேலும் காணொளி, இணையம் வாயிலாக மக்களை சந்திக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

Assembly election west bengal Mamata Banerjee
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe