இந்தியசுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜிசுபாஷ்சந்திரபோஸின் பிறந்தநாள்வரும் ஜனவரி23 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்தநிலையில் மத்திய அரசு, நேதாஜியின் பிறந்தநாள், 'பராக்ரம்திவாஸ்' (பராக்கிரமஜெயந்தி) எனும் பெயரில் கொண்டாடப்படுவதாகஅறிவித்துள்ளது. மேலும் கொல்கத்தாவில் நடைபெறும்முதல்பராக்ரம்திவாஸ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் எனவும்மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், மத்திய அரசின்இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மம்தாபானர்ஜி, சட்டப்பேரவை தேர்தல்வருவதையொட்டி, மத்திய அரசு நேதாஜியை வாக்கு அரசியலுக்காகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நேதாஜியின் பிறந்தநாள், தேஷ் நாயக் திவாஸாக(தேச நாயகஜெயந்தி) அனுசரிக்கப்படும் எனஅவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை நெருங்கும்நேரத்தில், இரு கட்சிகளும் நேதாஜியை வைத்து அரசியல் செய்வதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.