Advertisment

பிரதமருடனான ஆலோசனை - பங்கேற்காத மம்தா!

mamata banerjee

இந்தியாவில் கரோனாபாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மஹாராஷ்ட்ராமாநிலத்தின் நாக்பூரில் ஒருவார காலத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

குஜராத்தின் நான்கு மெட்ரோ நகரங்களான அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட்டில்இன்றிலிருந்து(17.03.2021) 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. மத்தியப் பிரதேசத்தின்போபால் மற்றும் இந்தூரில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது.

Advertisment

கரோனாபரவல் அதிகரித்து வரும் சூழலில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களோடு இன்று ஆலோசிக்கவுள்ளார். இந்தநிலையில்இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்கமுதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்ளஇருப்பதால், பிரதமருடனான ஆலோசனையில் மம்தா கலந்துகொள்ளமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரச்சாரத்தில் இருப்பதால், பிரதமருடனான ஆலோசனையில் அவர் பங்கேற்கமாட்டார்எனவும், அவருக்குப்பதிலாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பங்கேற்பார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

corona virus Narendra Modi Mamata Banerjee
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe